Pages

நான்

மண்ணில் விழும் முன்
மழைக்கு இடமில்லை
மழைபோல்
விழுந்தேன்


விழுந்தவன்
எழுந்தேன்
எல்லாம்
என்னுடையதாயிற்று

உறவு
பகை
ஒன்றே மற்றொன்றாக
மாறி மாறி

இறையுண்டு என்றேன்
பின்
இறையில்லை என்றேன்

கரை தேடுவதாய்
ஒரு கதை
பின் கதை
தேடிக் கரையில்

அதுவும் நானே.

புரியாதது சில
புரிந்தது போலும் பல.

இவையில் நானெங்கே?
தேடுவதும் நானே.

4 comments:

santhanakrishnan said...

நான் என்ற தேடல் பல
இடங்களுக்கு இட்டுச் செல்லும்
ஒரு மாயப் பாதை.
பயணியுங்கள்.

முத்தையா ராஜன் said...

Arumai. . .

Kavithai ezuthuvathil vitthakanagivittai nanba. . .

எட்வின் said...

அருமைங்க...ஆரம்ப வரிகள் மன்னில் என்றிருக்கிறது, மண்ணில் என்று வந்திருக்க வேண்டும்.

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

@Edwin:

ரொம்ப நன்றி. எழுத்துப்பிழையைத் திருத்தியாச்சு எட்வின்.

உங்களுடைய கேமரா கண்கள் பாராட்டுக்குரியது.