Pages

என்னென்ன செய்தோம் இங்கு (மயக்கம் என்ன - திரைப்படப் பாடல்)


என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே

எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே

காணாத துயரம் கண்ணிலே

ஓயாத சலனம் நெஞ்சிலே


இறைவா சில நேரம் எண்ணியது உண்டு

உன்னை தேடி வந்ததும் உண்டு

சன்னதியில் சலனம் வெல்லுமா

இறைவா

அன்பான புன்னைகை செய்வாய்

அழகான பார்வையில் கொல்வாய்

நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்

கல்லாக இருப்பவன் நீயா

கண்ணீரை துடைப்பவன் பொய்யா

உள் நெஞ்சிலே உனை வாங்கினால்

கரை சேர்க்கிறாய்


வாழ்கையின் பொருள்தான் என்ன

வாழ்ந்துதான் பார்த்தால் என்ன

கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்

காலை சூரியனின் ஆதிக்கமா

பாடும் பறவைகளும் போதிக்குமா

காலை சூரியனின் ஆதிக்கமா

பாடும் பறவைகளும் போதிக்குமா

உனது அரசாங்கம் பெரும் காடு

உலகம் அதிலே ஒரு சிறு கூடு

உன்னை அணைத்து கொண்டு

உள்ளம் மருகி நின்றால்

சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்


இறைவா சில நேரம் எண்ணியது உண்டு

உன்னை தேடி வந்ததும் உண்டு

சன்னதியில் சலனம் வெல்லுமா

இறைவா


உள்ளிருக்கும் உன்னை தேடி

ஓயாமல் அலைவோர் கோடி

கருவறையா நீ கடல் அலையா

மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்

நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்

மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்

நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்

என்னில் கடவுள் யார் தேடுகிறோம்

பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்

கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த

பெருந்தாயின் கருணை மறக்கிறோம்


இறைவா சில நேரம் எண்ணியது உண்டு

உன்னை தேடி வந்ததும் உண்டு

சன்னதியில் சலனம் வெல்லுமா

இறைவா

அன்பான புன்னைகை செய்வாய்

அழகான பார்வையில் கொல்வாய்

நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்

கல்லாக இருப்பவன் நீயா

கண்ணீரை துடைப்பவன் பொய்யா

உள் நெஞ்சிலே உனை வாங்கினால்

கரை சேர்க்கிறாய்

சிதறியவை...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசேன்
உன்னை உள் வைத்து புறமெங்கு போவேன்?

மனமெங்கும் மழைக்காளான்
நிற்க. மழை நிற்க.

அகம்-புறம், அறிவு-மனம்,
மழையில் நனைந்த குளம் போல.

மழை வர பூமி, மதில் மேல் பூனை
மழை வரட்டும்.
மழை ஒரு வழியாக, மதிலிரு வழியாக.

ஒன்றோடொன்றொவ்வாது ஒருபொருட் பன்மொழி,
ஒவ்வும் பொருளிலா இரு மொழி இரட்டைக்கிளவி.
ஒவ்வும் பொருளிலா இரு மொழியும்,
ஒவ்வாதொருபொருட் பன்மொழியும்,
ஒரு மொழியே.

நீ வந்ததில்

உன் நீளத் தலைமுடி தரையில்
உலரும் நீலப் புடவை கொடியில்
நீ கண்ணாடியில் ஒட்டிய பொட்டு, முகம் பார்க்கையில் என் நெற்றியில்
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை திரவியம் என் நாசியில்
என் செருப்புக்குப் பக்கத்தில் உன் காலணி
அடுக்கி வைக்கப்பட்ட அலமாரி
பளிச்சென சிரிக்கும் கடவுளர்
மேசையில் கலைந்து கிடக்கும் என் காகிதங்களுக்கிடையில் சில அழகுக் குறிப்புகள்
வெட்கத்தோடு மறைந்தும் மறையாமலும் இருக்கும் உன் உள்ளாடைகள்
பாதியான என் மெத்தை; ஒளி நிறைந்த என் படுக்கையறை
என் வீட்டிற்குப் பெண்மை வந்தது
என் வீடு அழகானது
நீ வந்ததில்.

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

அருமையான கட்டுரை. எழுத்தாளர் ஜெமோவின் வலைத்தளத்தில் படித்தது.

//

தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் படித்த ஒரு கட்டுரை http://koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=864&title=astonishing-era-and-few-questions-on-emperor-raja-raja-chozhan பற்றி உண்மையை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன்… இது போன்ற கட்டுரைகள் அனைத்தும் முற்றிலும் உண்மையாக இருக்க முடியாது / பொய்யாகவும் இருக்க முடியாது என்பதால் , இதை பற்றி உண்மையை தங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என நெனைக்கிறேன்.

முழுக்கட்டுரையில் இருந்து எனக்கு நெருடலை ஏற்ப்படுத்தய அந்த வரிகளை மற்றும் கீழே இணைத்துள்ளேன்… தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்…

சரி… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்… வழிபாட்டுத்தலங்கள்… சிற்பங்கள்… ஓவியங்கள்… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?

//

முழுமையான கட்டுரைகளை படிக்க:

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - பாகம்1

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - பாகம் 2

நன்றி: ஜெயமோகன்.இன்

நான்

மண்ணில் விழும் முன்
மழைக்கு இடமில்லை
மழைபோல்
விழுந்தேன்


விழுந்தவன்
எழுந்தேன்
எல்லாம்
என்னுடையதாயிற்று

உறவு
பகை
ஒன்றே மற்றொன்றாக
மாறி மாறி

இறையுண்டு என்றேன்
பின்
இறையில்லை என்றேன்

கரை தேடுவதாய்
ஒரு கதை
பின் கதை
தேடிக் கரையில்

அதுவும் நானே.

புரியாதது சில
புரிந்தது போலும் பல.

இவையில் நானெங்கே?
தேடுவதும் நானே.