மாமன் பொண்ணிருக்கு, அத்த மகளிருக்கு
அவளயெல்லாம் விட்டுப்புட்டு
மக்குப்பய மனசுக்குள்ள
உன் நெனப்பு ஏனிருக்கு?
அடி ஓலவாயி
வார்த்த ஒழுகும் ஓட்டவாயி
உன்னப்போல ஆள எங்கயும்
நான் பார்த்ததில்ல தாயி
ஊரு கத பேசுற
ஒறவு கத பேசுற
உன் கத என் கத கேட்டா
என்னையே நீ ஏசுற
வாய மூடமாட்ட
வம்பு சண்ட விடமாட்ட
ஒத்த சொல்லு நான் கேக்குறேன்
அந்த சொல்லு சொல்லமாட்ட
கொஞ்சிப் பேசயில
மிஞ்சி ஏசையில
மிஞ்சி ஒன்னு போட்டுவிட
கெஞ்சுதடீ என் மனசு
4 comments:
naan itha pola kavithayellaaam padichchathey illa.. barathiraja cinemaala vara dialogue thaan theriyum!
but ippadi oru rasam irukku athulannu ippothaan theriyuthu!
all i can say- bravo!
:)
வட்டார வழக்கில் கவிதை தனி அனுபவம். எனக்கு சொற்பமே தெரியும்.
நன்றி மாதங்கி.
அருமையான நடை, வாழ்த்துக்கள் சார்!..:)
வாங்க தக்குடுபாண்டி சார். வணக்கம். நீங்க பாராட்டினது ரொம்ப மகிழ்ச்சி.
நானும் உங்கள மாதிரி ரஸமா கொஞ்சம் நகைச்சுவையோட எழுதனும்னுதான் ஆசை. ஆனா வரணுமே. வரல.
அதுனால நான் உங்க தளத்துலயே படிக்கறேன்.
Post a Comment