Pages

நமக்கு என்னதான் தேவை?

இந்தியாவை விட்டு வெளியேறி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்றாலும், இங்கே நான் காணும் விஷயங்கள் நம் நாட்டில் என்ன குறைபாடு என்பதை தெளிவாக விளக்குகின்றன. இன்னிக்கு சாயங்காலம் என்னுடைய நண்பர்கள் இருவருடன் காபி குடிக்க வெளியே சென்று இருந்தேன்.

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நானும் அந்த நண்பரும் எப்போது சந்தித்தாலும் எங்களுடைய பேச்சு ஓரிடத்தில் வந்து முடியும். அது என்னன்னா, இந்தியாவிற்கு என்ன தேவை? நம்மால் என்ன செய்ய இயலும்? என்னுடைய நண்பர் இதில் நிறைய ஆராய்ச்சி செய்பவர். அவர் சாப்பிடும், தூங்கும், சம்பாதிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவருக்கு இதுதான் வேலை. நாங்கள் இங்கே இருந்தாலும் இன்னும் சில வருடங்களில் நமது நாட்டிற்குத் திரும்பி ஏதாவது செய்து சமுதாய முன்னேற்றத்தில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

விஷயத்திற்கு வருகிறேன்....அப்படி இன்று காபி கடைக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சும்மா இதே மொக்கை தான் (ஆனால் எனக்கு அந்த மொக்கையில் ஒரு நம்பிக்கை உண்டு). அப்போது எதிரில் ஒரு கார் இன்னொன்று மீது மோதியது. என்னுடைய நண்பர் உடன் சொன்னார்...ராம்கி...இப்போது மணி சரியாக 7.58. இன்னும் மூன்று நிமிடங்களில் இங்கே போலீஸ் கார் வரும் பார்...என்றார். அதே போன்று சரியாக இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. அந்த அளவிற்கு இங்கு இருக்கும் காவல் துறையை நம்பலாம். இதக்காட்டி என்னோட நண்பர் சொன்னார்...இந்த நம்ம ஊர்ல நடக்கவே நடக்காது ராம்கி அப்டின்னார். நம்ம ஊர்ல என்ன நடக்குதுன்னு பாத்தா....இன்னும் நம்ம போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு விட்டுடறாங்க....இதுக்கு என்ன பன்றதுன்னு யோசிச்சுட்டே வீட்டுக்கு திரும்பி வந்தோம்...

சமுதாய முன்னேற்றத்துக்கு என்ன தேவை அப்டிங்கறதுல...என்னோட அபிப்ராயம் என்னன்னா...நம்ம சொசைட்டில படிப்பு கொஞ்சம் அதிகமா சொல்லி குடுக்கனும்... எல்லா பசங்களையும் படிக்க வெக்கனும்... படிக்க வெச்சா போதும்... மத்தது எல்லாம் தானா நடக்கும்....அப்டிங்கறது. என்னோட நண்பர் சொல்லுவார்...இது மட்டும் போதாது ராம்கி..இன்னும் நிறைய ப்ரச்னை இருக்கு,.. நான் நிறைய யோசிச்சுட்டு விட்டுட்டேன் அப்டிங்கறார். ஆனா எனக்கு அதுல நம்பிக்கை இல்ல... என்ன பொறுத்த வரைக்கும்..ஏதாவது ஒரு முயற்சி பன்னிகிட்டே இருக்கனும். அப்புறம் சிந்திச்சுகிட்டே இருக்கனும்... ஏதாவது ஒருநாள் அது பலிக்கும் அப்டிங்கற நம்பிக்கை இருக்கு.

இப்போதைக்கு நான் என்ன நினைக்கறேன்னா, கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு அங்க போயி நான் நினைக்கறது எல்லாத்தயும் செய்யனும். பாக்கலாம்... காலம் கண்டிப்பா பதில் சொல்லும்.

உங்களுக்கு எதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க...இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கு தெரிய வந்தா...கண்டிப்பா முயற்சி செய்வாங்க. உங்க ஐடியாவ மத்தவங்களோட பகிர்ந்து கொண்டே இருங்க. கண்டிப்பா ஒருநாள் முயற்சி பலிக்கும்.

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

குழலி / Kuzhali said...

//நம்ம சொசைட்டில படிப்பு கொஞ்சம் அதிகமா சொல்லி குடுக்கனும்... எல்லா பசங்களையும் படிக்க வெக்கனும்... படிக்க வெச்சா போதும்... மத்தது எல்லாம் தானா நடக்கும்....அப்டிங்கறது. என்னோட நண்பர் சொல்லுவார்...இது மட்டும் போதாது ராம்கி..இன்னும் நிறைய ப்ரச்னை இருக்கு,.. நான் நிறைய யோசிச்சுட்டு விட்டுட்டேன் அப்டிங்கறார்.//
வெறும் படிப்பு மட்டும் மாற்றத்தை தருவதில்லை, படித்தவர்க்கள் செய்கின்ற அய்யோக்கியத்தனத்தையும் மொள்ளமாறித்தனத்தையும் என்னத்த சொல்வது, படித்தவனுக்கு படிக்காதவர்களை விட பொறுப்பு அதிகம், ஆனால் படித்தவன் என்ற போர்வையில் நிறைய படித்தவர்கள் செய்வது ரொம்ப மோசம் :-(

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

உண்மை. அதுவும் ஒரு காரணம். இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறேன். இப்போது என்னிடம் கேட்டால் ஒரு பட்டியல் தர இயலும். ஆனால் மூல காரணம் என்ன? எங்கிருந்து வருகிறது? என்று ஆராய வேண்டும். அதற்கு ஒரு தலைமுறை அவகாசம் தேவை என்றால் என்னாலும் அதை செய்ய இயலாமல் போய்விடும். ஆக இப்போதைக்கு என்ன தெரியுமோ அதை வைத்துக்கொண்டு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க வேண்டிதுதான். பாக்கலாம். நான் இறைவனிடம் வேண்டுவது எல்லாம் "நான் இதே எண்ணங்களொடு மாறாமல் இருக்கவேண்டும்" என்பதுதான்.