மழையின் துளியின் இடையில்
வெளியின் துளையில்
வெயிலின் அலையில்
நுழைந்து கடக்க வேண்டுகையில்
இடையே இடையே
இடம் ஒன்று தேடி
தடையே இல்லா தடம் ஒன்று நாடி
விடையே இல்லா வினாக்களோடு
அலைந்து கொண்டிருக்கையில்
தனியே தனியே கூடிக் கூடி
தவித்து தவிர்த்து தகர்ந்து சேர்ந்து
தேடித் தேடித் தொலைந்து தவிக்கையில்
என்னில் உள்ளது காமம்
எண்ணம் கொண்டது பொருள்
உடலிருந்து சிந்தனை வரை
மனமிருந்து மானுடம் வரை
எத்தனையோ இருக்க
இவையில்லா நானும் நானல்ல
நானில்லா நானும் நானல்ல
தன்னில் உள்ளது
தண்ணீரில் எழுதியதோ?
2 comments:
/// தன்னில் உள்ளது
தண்ணீரில் எழுதியதோ? ///
எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க !
மிக்க நன்றி கேசவன்.
மிக நீண்ட நெடிய பயணத்திற்குப்பின் நான் ஒத்துக்கொள்ள முயற்சிக்கும் உண்மை அது. அழகு, ஆனால் கடினம்.
பின்னூட்டத்திற்கு நன்றி.
தங்களுடைய வலைத்தளம் சுவையுள்ளதாய் இருப்பதாக அறிகிறேன். திங்கட்கிழமை படித்துவிட்டு எழுதுகிறேன்.
Post a Comment