Pages

மீண்டும் ஒரு வசந்தம்

ஒரு மாலை
ஒரு சோலை
என் இலையுதிர் காலத்து
நட்பு வட்டாரம்.

காய்ந்த இலைகளின்
இடைவெளிகளில்
கால் பதித்து
உறவாடிய உறவு.

என்னில் அதையும்
அதில் என்னையும்
இணைத்துப் பார்த்த நினைவு.

இன்று.
சருகுகளைக் காணவில்லை
சுள்ளிகள் கண்ணில் படவில்லை.

மீண்டும் ஒரு பிறப்பு
மீண்டும் இரு வசந்தம்.

மரங்களெல்லாம்
உதிர்ந்திருந்தாலும்
உயிர்த்தே இருந்தன போலும்.

புதியதொரு புல்வெளி
கால்களுக்கு இதமாய்
புதிய இலைகள்
கண்களுக்கு சுகமாய்.

பச்சை நிறத்தை
முதன் முதலாய்ப்
பார்ப்பது போன்றதொரு
பிரமிப்பு.

பூவாசம்
வேண்டாமல் வந்து
நுழைகிறது
என் நாசிக்குள்.

எல்லாம் இலவசம்.

ஆனால்
என்வசம் என்னை
இல்லாமல் செய்கையில்
இலவசமும் வேண்டாம்.

கண்ணுக்கு
கருப்புக் கண்ணாடி.

நாசிக்குத்
தலைவலித் தைலம்.

இப்படி எதைத் தடுத்தாலும்
பயனில்லை.

மீண்டும் ஒரு வசந்தம்
என் மனசுக்குள்.

1 comment:

vgm said...

Great da.... Apdi enna vasantham un manasula....? ;-)